அண்மைய செய்திகள்

recent
-

16 வருடங்களின் பின்னர் தோன்றும் அபூர்வ சூரியகிரகணம்: பகல் வேளையை இரவு ஆக்கிரமிக்கவுள்ளது


அபூர்வமானதொரு சூரிய கிரகணம் வரும் மார்ச் மாதத்தில் நடக்கவுள்ளதாக விஞ்ஞானிகள் எதிர்வுகூறியுள்ளனர்.

இதுபோன்ற சூரிய கிரகணம் ஒன்று 1999 ஆம் ஆண்டிலேயே இறுதியாக நடந்துள்ளது. 16 வருடங்கள் கழித்து அது தற்போது நிகழவுள்ளது.

வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி பகல் வேளையை இரவு ஆக்கிரமிக்கவுள்ளது. இது சிலவேளை 90 நிமிடங்கள் நீடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஐரோப்பாவைப் பொறுத்தவரை சுமார் 84 சதவீதமான சூரிய ஒளி மறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் வடக்கு நோர்வே மற்றும் பரோயே தீவுகளில் முழு சூரிய கிரகணம் ஏற்படவுள்ளது.

மீண்டும் இதுபோன்ற ஒரு சூரிய கிரகணம் 2026 ஆம் ஆண்டில் தான் வரும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.
16 வருடங்களின் பின்னர் தோன்றும் அபூர்வ சூரியகிரகணம்: பகல் வேளையை இரவு ஆக்கிரமிக்கவுள்ளது Reviewed by NEWMANNAR on February 25, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.