ஐ.நா.விசாரணை அறிக்கையை தடுக்க முடியாது-மன்னார் ஆயர்
சர்வதேசத்தை நம்பியே நாம் விசாரணையைக் கேட்டோம்.மைத்திரி அரசு தேவையெனில் உண்மையைக் கண்டறியட்டும்.அதன் பின்னர் நீதியைச் செலுத்தலாம்.ஆனால் ஐ.நா.விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதை எதற்காகத் தடுக்க வேண்டும்? நம்பிக்கை இல்லை என்பதுதானே அதன் அர்த்தம்.இதனை நாம் ஏற்றக் கொள்ள முடியாது.விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.என மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற பேரணியின் போது ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தப் பேரணி நீதி கேட்கும் வைபவமாகும்.பிற்போடப்படும் நீதி மறுக்கப்படும் நீதியாகச் சட்ட இயலிலே அடிப்படைத் தத்துவமாக உள்ளது.
உள்ளக விசாரணை அறிக்கையில் நம்பிக்கை இல்லை என்பதனால் தான் நாங்கள் ஐ.நாவை நாடுகிறோம்.அவர்கள் எம்மைக் கைவிட்டுவிட்டதாகவும் ஏமாற்றி விட்டதாகவும் உணர்கின்றோம்.
உள்ளக விசாரணை செய்வதாக அரசு கூறியிருக்கின்றது.அதற்கு 6மாதங்கள் போதாது.2வருடங்கள் வரை நீடிக்கலாம்.அது முழுமையாகச் செய்யும் விசாரணையாக இருக்காது.ஆகவே மீண்டும் பிற்போட்டு சில வேளைகளில் அடுத்த வருடம் மார்ச் மாதம் சமர்ப்பிக்குமாறும் அரசு கோரக்கூடிய சந்தர்ப்பம் இருக்கிறது.அது தான் தத்துவமாகவும் நீதி மறுக்கப்படும் நீதியாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஐ.நா.விசாரணை அறிக்கையை தடுக்க முடியாது-மன்னார் ஆயர்
Reviewed by NEWMANNAR
on
February 25, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
February 25, 2015
Rating:


No comments:
Post a Comment