அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் எமிழ் நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து எரியுண்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு-Photos

மன்னார் எமிழ் நகர் கிராமத்தில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள வீடு ஒன்றிலிருந்து எரியுண்ட நிலையில் பெண் ஒருவருடைய சடலத்தை இன்று(24) செவ்வாய்க்கிழமை மதியம் மீட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் மன்னார் சின்னக்கடை பகுதியை வதிவிடமாக கொண்ட செபஸ்தியான் திரேசா(வயது-65) என அவருடைய உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

குறித்த பெண் எமிழ் நகர் பகுதியில் தமது உறவினர்களுடன் வசித்து வந்த நிலையில் இன்று(24) செவ்வாய்க்கிழமை காலை வீட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளார்.இவருக்கு ஒரு கால் இயலாத நிலையில் கம்பு ஊன்றியே சென்றுள்ளார்.

வெளியில் சென்ற குறித்த பெண் வீடு திரும்பாமை குறித்து உறவினர்கள் தேடியுள்ளனர்.

இதன் போது மன்னார் எமிழ் நகர் கிராமத்தில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள வீடு ஒன்றிலிருந்து எரியுண்ட நிலையில் குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டார்.

அருகில் மண்ணெண்னையுடன் போத்தலும் காணப்பட்டது.இவ்விடையம் தொடர்பில் உறவினர்கள் உடனடியாக மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலமாக மீட்கப்பட்ட குறித்த கைவிடப்பட்ட வீட்டில் இருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் உள்ள கடை ஒன்றில் மண்ணெண்னை மற்றும் தீப்பெட்டி ஆகியவற்றை குறித்த பெண் வேண்டியுள்ளதாக தெரிய வருகின்றது.

குறித்த பெண் திருமணமாகாதவர் என்பதுடன் ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





மன்னார் எமிழ் நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து எரியுண்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு-Photos Reviewed by NEWMANNAR on February 24, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.