அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட மொழிச்சங்கங்களின் ஒன்றியம் ஆரம்பிப்பு.

மன்னார் மாவட்ட மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் ஊடாக, மன்னார் மாவட்டத்தில் இரு மொழிப் பிரயோகத்தை பரப்பும் வகையில் ஒரே நாட்டை ஒரே தேசத்தைக் கட்டியெழுப்புதல் என்ற செயற்பணி மூலமாகவும், மொழிக் கற்றல் தொடர்பாக மன்னார் மாவட்ட மொழிச்சங்கங்களின் ஒன்றியம் நேற்று திங்கட்கிழமை(23) மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மன்னார் பெரியகமம் பொது நோக்கு மண்டபத்தில் ஆரம்ப நிகழ்வு இடம் பெற்றது.

எல்லா மக்கள் குழுவினரையும் உள்ளடக்கும் வகையில் மாவட்ட மட்டத்தில் நிகழ்ச்சிகளை செயற்படுத்துவதற்கும், மொழிப்பிரயோகத்திற்கான உரிமைகள் மற்றும் அதற்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும், மொழிகளுக்கிடையே தொடர்பாடல் மற்றும் பரஸ்பர உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் சமூக ஒருமைப்பாட்டு பேணும் நோக்கோடு குறித்த ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் போது குறித்த ஒன்றியத்தின் நிர்வாக தெரிவும் இடம் பெற்றது.

தலைவராக றீற்றா (செபஸ்ரியன் மொழிச்சங்கம் பெற்றா மன்னார்)உபதலைவர்:- வீ. வசந்திராதேவி (விடியலைநோக்கி மொழிச்சங்கம், பட்டித்தோட்டம்)செயலாளர்:- ஆர்.வி. லக்சிலா (தனிநாயகம் அடிகளார் மொழிச்சங்கம், பணங்கட்டுக்கொட்டு மேற்கு)
உப செயலாளர்:- வை. ஜெனிற்றா (தலைவர், பிரஜைகள் சபை பணங்கட்டுக்கொட்டு கிழக்கு)
பொருளாளர்:- ரீ. அனற்லின்ரா (வளர்பிறை மொழிச்சங்கம், உப்புக்குளம் வடக்கு)

நிர்வாக உறுப்பினர்கள்

01. ஏஸ். முதிவதி (உதயம் மொழிச்சங்கம், உதயபுரம் சிறுத்தோப்பு)
02. யூ. குயின்சி (டேவிட் மொழிச்சங்கம், பெரியகமம்)
03. ஏம். மாதிஹா வெண்புறா மொழிச்சங்கம், எருக்கலம்பிட்டிமத்தி)
04. ஏஸ் அமலி (எழுத்தூர் மொழிச்சங்கம்)
05. ஆர். சுசிலாதேவி ( மகளீர் மொழிச்சங்கம் சாவற்கட்டு)

போசகர்:- மக்கள் காதர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாவட்ட மொழிச்சங்கங்களின் ஒன்றியம் ஆரம்பிப்பு. Reviewed by NEWMANNAR on February 24, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.