மன்னார் அரச பேரூந்து தரிப்பிடப்பகுதியில் நடை பாதையை ஆக்கிரமித்துள்ள வர்த்தக நிலையங்களினால் பாதசாரிகளுக்கு இடையூறுகள் ஏற்படுவதாக முறைப்பாடு.
மன்னார் அரச பேரூந்து தரிப்பிடப்பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் நடை பாதைகளை ஆக்கிரமித்துள்ளமையினால் பொதுமக்கள் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக மன்னார் நகர சபையின் உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாசன் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துகின்ற வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு இவ்விடயம் தொடர்பில் பல தடவைகள் எடுத்துக்கூறியும் அவர்களுக்கு பல ஆலோசனைகளை கூரிய போதும் அவர்கள் எவ்வித நடவடிக்கைகளையும் இது வரை மேற்கொள்ளவில்லை.
-குறிப்பாக நடை பாதை வியாபாரிகள் மக்கள் நடந்து செல்லுகின்ற பாதைகளில் தமது வியாபாரப்பொருட்களை வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
அது மட்டும் இன்றி அப்பகுதியில் உள்ள வர்த்தகர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட அளவிற்கு மேலாகவும் தமது வர்த்தக நிலையங்களை விஸ்தரிப்பு செய்து பாதசாரிகளுக்கு தொடர்ந்தும் இடையூறை ஏற்படுத்தி வருகின்றனர்.
குறித்த நிரந்தர வர்த்தகர்கள் தமது கடைகளுக்கு முன்பாகவும் பொருட்களை அடுக்கி வைக்கின்றனர்.
இச்செயற்பாடுகளினால் நாளாந்தம் பஸ் தரிப்பிடத்திற்கு வரும் ஆண்கள்,பெண்கள்,வயோதிபர்கள்,குறிப்பாக கர்ப்பிணித்தாய்மார்கள் என பலரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.
மக்களின் பிரச்சினைகள் குறித்த வர்த்தகர்களுக்கு மன்னார் நகர சபை பல ஆலோசனைகளை வழங்கியும் அவர்கள் எமது ஆலோசனைகளை உதாசீனம் செய்து தொடர்ந்தும் பொது மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.
எனவே இச் செயற்பாடுகள் தொடருமாக இருந்தால் பொது மக்களின் நன்மை கருதி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலை ஏற்படும் என மன்னார் நகர சபையின் உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாசன் மேலும் தெரிவித்தார்.
மன்னார் அரச பேரூந்து தரிப்பிடப்பகுதியில் நடை பாதையை ஆக்கிரமித்துள்ள வர்த்தக நிலையங்களினால் பாதசாரிகளுக்கு இடையூறுகள் ஏற்படுவதாக முறைப்பாடு.
Reviewed by NEWMANNAR
on
February 24, 2015
Rating:

No comments:
Post a Comment