சுண்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இராணுவ புலனாய்வாளர்கள் மேற்கொண்டுள்ள தாக்குதல் சம்பவம் கண்டிக்கத்தக்கது-செல்வம் அடைக்கலநாதன்.
வடமராட்சி சுண்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இராணுவ புலனாய்வாளர்கள் மேற்கொண்டுள்ள தாக்குதல் சம்பவம் மீண்டும்,மீண்டும் மீனவ சமூகத்தை அடக்கு முறைக்குள் கொண்டு வரும் செயலாக காணப்படுவதாகவும்,இச்சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று(24) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,,,,
இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் அனைத்து இன மக்களையும் சமத்துவத்துடன் செயற்பட வழிவகுத்துள்ளது. கடந்த கால ஆட்சியில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சினைகள் புதிய அரசில் நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றது.
ஆனால் வட பகுதி மீனவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் இது வரை கிடைக்கவில்லை. வடபகுதி மீனவர்கள் கடற்படையினரின் சோதனைகளினால் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வரும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வடமராட்சி சுண்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது கடந்த சனிக்கிழமை இராணுவ புலனாய்வாளர்கள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
இராணுவத்தின் அனுசரணையுடன் அப்பகுதியில் தென்னிலங்கையில் இருந்து வருகை தந்துள்ள மீனவர்கள் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த மீனவர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையிலே வடமராட்சி சுண்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இராணுவ புலனாய்வாளர்கள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
அப்பகுதி மீனவர்களை இராணுவமும்,புலனாய்வாளர்களும் தொடர்ந்தும் அச்சுறுத்துவதாக அந்த மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே வடமராட்சி சுண்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இராணுவ புலனாய்வாளர்கள் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதோடு இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அத்தோடு தென்னிலங்கை மீனவர்களின் அத்து மீறிய செயற்பாடுகளை தடுக்க கடற்தொழில் திணைக்களம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.என குறிப்பிடப்பட்டுள்ளது.
சுண்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இராணுவ புலனாய்வாளர்கள் மேற்கொண்டுள்ள தாக்குதல் சம்பவம் கண்டிக்கத்தக்கது-செல்வம் அடைக்கலநாதன்.
Reviewed by NEWMANNAR
on
March 24, 2015
Rating:
No comments:
Post a Comment