தாயுடன் 18 வருடங்களின் பின் இணைந்த பொப்பி
இலங்கையில் பிறந்து பிரித்தானியாவில் வசித்து வந்த பொப்பி என்ற யுவதி 18 வருடங்களின் பின்னர் தனது தாயுடன் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் பெருந்தோட்டப் பகுதியில் பிறந்த பொப்பி என்ற பெண் குழந்தையை பிரித்தானிய தம்பதியினர் தத்தெடுத்திருந்தனர்.
இதன்பின்னர் பிரித்தானிய குடும்பத்தால் வளர்க்கப்பட்ட பொப்பி, தற்போது மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வருகிறார்.
இந்நிலையில் தமது பெற்றோர் இலங்கையில் வசிப்பதை அறிந்து கொண்ட பொப்பி, அவர்களைத் தேடி இலங்கை வந்துள்ளார்.
இலங்கையில் தமது பெற்றோரும் போரினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்துடன் விஜயம் செய்த பொப்பிக்கு தமது பெற்றோர் இருப்பது போர் இடம்பெறாத பெருந்தோட்டப் பகுதி என்பது தெரியவந்தது.
இந்நிலையில் பொப்பி சம்பவம் குறித்தது விபரிக்கையில்,
நான் குறித்த தோட்டத்துக்கு சென்று ஹோட்டல் முகாமையாளர் ஒருவரிடம் விசாரித்தபோது, அருகில் இருந்த சிறிய பெண் ஒருவர் என்னைக் கட்டித்தழுவினார்.
இருப்பினும் அவர் எனது தாய் என்பதை நான் நம்பவில்லை. இருந்தபோதும் அதுவே என்னைப் பெற்றதாய் என்பதை கேள்விப்பட்டு ஆனந்தமடைந்தேன்.
எனது சகோதரிகளில் ஒருவர் தோட்டத் தேயிலை தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற அதேநேரம் , மற்றையவர் ஆசிரியையாக பணியாற்றி வருவதாக பொப்பி தெரிவித்தார்.
இது குறித்து பொப்பியின் தாய் காலிங்கா குறிப்பிடுகையில்,
ஏற்கனவே இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான எனது கணவர், குடிப்பழக்கம் காரணமாக இறந்துவிட்டார்.
அவர் இறக்கும் போது நான் பொப்பியை வயிற்றில் சுமந்திருந்திருந்தேன். எனவே, குழந்தையை வளர்க்க முடியாமையால் எமது தோட்டத்துக்கு உல்லாசப் பயணிகளாக வருகைதந்த பிரித்தானிய தம்பதியினருக்கு அந்த குழந்தையை தத்துக்கொடுத்ததாக தெரிவித்தார்.
இதேவேளை, இவ்வாறு தத்துக்கொடுத்த குழந்தையான பொப்பி மீண்டும் வந்து எம்மை சந்திப்பார் என்று நான் நம்பவில்லை என பொப்பியின் தாய் மேலும் தெரிவித்தார்.
தாயுடன் 18 வருடங்களின் பின் இணைந்த பொப்பி
Reviewed by NEWMANNAR
on
March 30, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
March 30, 2015
Rating:


No comments:
Post a Comment