மன்னாரில் தொடர் மழையினால் நெல் அறுவடை பாதிப்பு.-Photos
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையின் காரணமாக நெல் அறுவடை பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தற்போது அறுவடைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் திடீர் திடீர் என மழை பெய்து வருகின்றமையினால் அறுவடை பாதிப்படைந்துள்ளதோடு அறுவடை செய்ய வேண்டிய நெற்பயிர்கள் மழை நீரில் நனைந்து காணப்படுவதாக விவசாயிகள் கலலை தெரிவித்துள்ளனர்.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் இம்முறை நெல் நல்ல விளைச்சலை கொடுத்துள்ள போதும் அதனை அறுவடை செய்ய முடியாத நிலையில் மழையினால் விவசாயிகள் துன்பத்தை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதே வேளை அறுவடை செய்து காயவைத்த நெல் மூடைகளும் மழை நீரில் நனைந்துள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மன்னாரில் தொடர் மழையினால் நெல் அறுவடை பாதிப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
March 29, 2015
Rating:

No comments:
Post a Comment