அண்மைய செய்திகள்

recent
-

மாந்தை மேற்கில் இரண்டு முக்கிய வீதிகளின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்.-Photos



மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட இரண்டு முக்கிய பிரதான வீதிகள் புனரமைக்கும் பணிகளை வடமாகாண வீதி,போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் நேற்று(28) சனிக்கிழமை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கருங்கண்டல்-காத்தான் குளம் பிரதான வீதி மற்றும் உயிலங்குளம் ஊடாக அடம்பன் செல்லும் வீதி ஆகியவற்றின் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரின் பணிப்புரைக்கு அமைவாக வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் சுமார் 04 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த வீதிகளின் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் மாந்தை மேற்கு பங்குத்தந்தை,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் மாந்தை மேற்கு பிரதேச சபையின் உப தலைவர் எஸ்.சௌந்தர நாயகம், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மன்னார் வவுனியா பிரதம பொறியியலாளர் ரகுநாதன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.













மாந்தை மேற்கில் இரண்டு முக்கிய வீதிகளின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்.-Photos Reviewed by NEWMANNAR on March 29, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.