பெரிய பண்டிவிரிச்சானில் கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மகளிர் அபிவிருத்தி நிலையம் திறந்து வைப்பு.-Photos
மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட மகளிர் அபிவிருத்தி நிலையம் நேற்று புதன் கிழமை(25) மாலை பெரிய பண்டிவிரிச்சானில் வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இக் கட்டிடமானது வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஐந்து இலட்சம் ரூபாய் நிதி உதவியோடு புனரமைக்கப்பட்டு அங்குள்ள மகளிருக்கு தையல் பயிற்சி போன்ற விடயங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.
-குறித்த நிகழ்விற்கு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன், மடு பிரதேச செயலாளர் எப்.சி.சத்திய சோதி,மடு பிரதேச கிராம அபிவிருத்தி அலுவலகர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பெரிய பண்டிவிரிச்சானில் கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மகளிர் அபிவிருத்தி நிலையம் திறந்து வைப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
March 26, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
March 26, 2015
Rating:








No comments:
Post a Comment