துணை விமானி வேண்டுமென்றே விமானத்தை மலையில் மோதியுள்ளார்: விசாரணை அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்
150 பேருடன் விபத்துக்குள்ளான ஜெர்மன்விங்ஸ் விமானம் வேண்டுமென்றே மலையில் மோதச்செய்யப்பட்டுள்ளது என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
‘லுப்தான்சா’ விமான நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘ஜெர்மனி விங்ஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் இருந்து ஜெர்மனியின் டசல்டார்ப் நகருக்கு சென்று கொண்டிருந்தது. ஏர்பஸ் ஏ-320 ரகத்தை சேர்ந்த இந்த விமானத்தில் ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பயணிகள், ஊழியர்கள் என 150 பேர் இருந்தனர்.இந்த விமானம் பிரான்ஸ் நாட்டின் பார்சிலோனட் நகருக்கு அருகே ஆல்ப்ஸ் மலையில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில், விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்தில் இருந்து (கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரம் மீட்டருக்கு மேலே) விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டது. கருப்பு பெட்டியில் பதிவான விவரங்களை ஆராய்ந்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து கருப்பு பெட்டியை விசாரித்து வரும் விசாரணை அதிகாரி பிரிஸ் ராபின் கூறியதாவது: - ”விமானத்தின் துணை விமானி, தலைமை விமானியை அறையையை விட்டு வெளியேற்றி விட்டு காக்பிட் அறையை திறக்க மறுத்துள்ளார். விமானத்தின் கட்டுப்பாட்டை துணை விமானி மட்டுமே கையாண்டுள்ளார். தொடர்ந்து அவர் விமானத்தை ஆல்ப்ஸ் மலையில் மோத செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. துணை விமானி யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அவருடைய பெயர் ஆந்த்ரேஸ் லுபிட்ஸ்(28). ஜெர்மன் நாட்டைசேர்ந்தவரான அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து எங்களுக்கு இன்னும் தெரியவரவில்லை. துணைவிமானியின் தனிப்பட்ட வாழ்க்கையின் பின்புலம் குறித்து ஜெர்மன் அதிகாரிகள் விரைவில் வழங்குவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.
துணை விமானி வேண்டுமென்றே விமானத்தை மலையில் மோதியுள்ளார்: விசாரணை அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்
Reviewed by NEWMANNAR
on
March 26, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
March 26, 2015
Rating:


No comments:
Post a Comment