அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் உலக வாய் சுகாதார தினம் அனுஸ்ரிப்பு.-Photos



உலக வாய் சுகாதார தினம் இன்று(20) வெள்ளிக்கிழமை மன்னாரில் அனுஸ்ரிக்கப்பட்டது.மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் விழிர்ப்புணர்வு ஊர்வலமும்,விழிர்ப்புணர்வு கருத்தமர்வும் இடம் பெற்றது.

காலை 8 மணயளவில் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன் குறித்த ஊர்வலம் ஆரம்பமானது.

குறித்த ஊர்வலத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம்,வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் ,மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரஜனி அன்ரன் சிசில்,மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தொற்றா நோய் பிரிவு வைத்திய அதிகாரி அன்ரன் சிசில்,மன்னார் வைத்திய சாலையின் பணியாளர்கள்,தன்னார்வத்தொண்டர்கள்,பொது சுகாதார பரிசோதகர்கள்,மருத்துவ தாதுக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

-குறித்த ஊர்வலம் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன் ஆரம்பமாகி பிரதான வீதியூடாக மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்து மீண்டும் மன்னார் பொது விளையாட்டு மைதான வீதியூடாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினை குறித்த விழிர்ப்புணர்வு ஊர்வலம் சென்றடைந்தது.

-குறித்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மக்களுக்கு விழிர்ப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
-ஊர்வலத்தை தொடர்ந்து மன்னார் நகர சபை மண்டபத்தில் விசேட நிகழ்வு இடம் பெற்றது.

-குறித்த நிகழ்வில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம்,வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன்,வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரஜனி அன்ரன் சிசில்,மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தொற்றா நோய் பிரிவு வைத்திய அதிகாரி அன்ரன் சிசில், மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம்,உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ்,நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் அன்புராஜ் லெம்பேட்,உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது வாய் சுகாதாரம் தொடர்பில் வருகை தந்தவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






















மன்னாரில் உலக வாய் சுகாதார தினம் அனுஸ்ரிப்பு.-Photos Reviewed by NEWMANNAR on March 20, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.