மன்னார் மாவட்டத்தில் நீண்ட காலம் ஊதியம் அற்ற நிலையில் சுகாதார தொண்டர்களாக கடமையாற்றிய பலருக்கு ஏமாற்றம்.-Photos
வடமாகாண சுகாதார தொண்டர்களுக்கு நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் மன்னார் மாவட்டத்தில் வைத்தியசாலை மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைகளில் பல வருடங்களாக ஊதியம் எதுவும் அற்ற நிலையில் கடமையாற்றி வந்த சுகாதார தொண்டர்கள் பலருக்கு நியமனக்கடிதம் வழங்காது புதிதாக பலருக்கு நியமனக்கடிதங்கள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதீக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சுகாதார தொண்டர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பாதீக்கப்பட்ட சுகாதார தொண்டர்கள் இன்று வெள்ளிக்கிழமை(20) காலை மன்னார் நகர சபையில் வைத்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம்,வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.சிறாய்வா ஆகியோரை சந்தித்து தமது பிரச்சினைகளை தெரிவித்த போதே அவர்கள் அவ்வாறு தெரிவித்தனர்.
-பாதீக்கப்பட்ட சுகாதார தொண்டர்கள் மேலும் தெரிவிக்கையில்,,,
மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் கடமையாற்றுகின்ற சுகாதார தொண்டர்களுக்கு நியமனக்கடிதம் வங்கும் நிகழ்வு நாளை சனிக்கிழமை(21) வவுனியாவில் இடம் பெறவுள்ளது.
-இந்த நிலையிலே மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் தள வைத்தியசாலைகள், சுகாதார சேவைகள் பணிமனைகளில் சுமார் 4 வருடங்கள் முதல் 15 வருடங்களுக்கு மேலாக சிறிய ஊதியத்துடன் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு நியமனக்கடிதங்கள் வழங்குவதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இருதியில் சுமார் 50 இற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு நியமனக்கடிதம் வழங்குவதற்கு எவ்வித நடவடிக்கைளும் மேற்கொள்ளப்படாத நிலை காணப்படுகின்றது.
சுமார் 4 முதல் 15 வருடங்கள் வரை சிறிய ஊதியத்துடன் கடமையாற்றி பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்த தமக்கு நிறந்தர நியமனம் வழங்கப்படும் என தெரிவித்தமைக்கு அமைவாக பல வருடங்களாக சம்பளம் இன்றி கடமையாற்றி வந்தோம்.
தற்போது சுகாதார தொண்டர்களுக்கு நிறந்தர நியமனம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.அதற்கமைவாக எமக்கும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இருதியில் எமது விபரங்கள் எவையும் அங்கு இல்லை.எமக்கு நிறந்தர கடிதம் வழங்கப்படாது என தெரிய வந்துள்ளது.
-நீண்டகாலம் சேவையாற்றிய எங்களுக்கு முன்னுரிமை வழங்குவதாக கூறி புதிதாக பலருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை தமக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக பாதீக்கப்பட்ட ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
-எனவே பல வருடங்களாக சம்பளம் இன்றி கடமையாற்றிய தமக்கு நிறந்தர நியமனத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கமாறு பாதீக்கப்பட்ட சுகாதார தொண்டர்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம்,வடமாகாண போக்குவரத்து அமைச்சர் அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.சிறாய்வா ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-எனினும் பாதீக்கப்பட்ட சுகாதார தொண்டர்களுக்கு நிறந்தர நியமனத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்வதாக வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் நீண்ட காலம் ஊதியம் அற்ற நிலையில் சுகாதார தொண்டர்களாக கடமையாற்றிய பலருக்கு ஏமாற்றம்.-Photos
Reviewed by NEWMANNAR
on
March 20, 2015
Rating:
No comments:
Post a Comment