அம்பிட்டிய ஆட்டோ சாரதியின் நேர்மை கண்டு கல்வி இயக்குனர் பாராட்டு
கண்டி பேராதனைப் பகுதியில் காணாமற் போன ரூபா 20,000 பணமும் மற்றும் சில ஆவணங்களும் அடங்கிய பேக்கைக் கண்டெடுத்த முச்சக்கர வண்டி ஓட்டுனரான தமிழ் வாலிபர் அதனை உரிமையாளரான கண்டி கல்வி வலய கல்வி இயக்குனரான பெண்ணிடம் அதே தினமே கொடுத்ததன் மூலம் பாராட்டுதலைப் பெற்றது மாத்திரமல்லாமல் அந்தப் பெண் மணி பரிசாகக் கொடுத்த ரூபா 10,000/=த்தை வாங்க மறுத்து தனது நேர்மையை வெளிப்படுத்தி பெருமிதத்துடன் நடந்துள்ளார்.
அம்பிட்டிய பகுதியில் வசிக்கும் குறித்த நபரின் முச்சக்கர வண்டியில் கல்விக்காரியாலய இயக்குனர் வாடகைக்கு அமர்த்தி பேராதனை வரை சென்று இறங்கியுள்ளார். ஆட்டோவும் திரும்பிச் சென்ற விட்டது ஆனால் தனது பணமும் மற்றும் ஆவணங்களும் தவறவிட்டதை இப்பெண் வீட்டிற்குப் போய்த்தான் தெரிந்து கொண்டார்.
தவறவிட்டதைப் பற்றி கிடைக்காது என்ற எண்ணத்தில் அதனை மறந்த நிலையில் இருந்த இவருக்கு காரியாலயத்தில் ஒரு ஆச்சரியம் காத்துக் கிடந்தது ஆம் அதே முச்சக்கர வண்டி சாரதி காணாமல் போன தனது பணம் மற்றும் ஆவணங்களுடன் எதிரே வந்து சகல வற்றையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள் நோனா என்று கொடுத்துள்ளார்.
என்ன ஆச்சரியம் எல்லாம் சரியாக இருக்கிறது நன்றி நன்றி என்று கூறியவர் அதிலிருந்து ரூபா 10,000/ இனை எடுத்துக் கொள்ளுங்கள் உங்களது நேர்மைக்கு எனது பரிசு என்று பணத்தைக் கொடுக்க, அதனை வாங்க மறுத்த சாரதி அம்பிட்டிய கோவில் தேர் உற்சவ காவடி நடனத்தின் போது கோயிலுக்கு அன்பளிப்பாக வழங்குங்கள் என்று கூறிவிட்டு அவ்விடத்திலிருந்து போயுள்ளார்.
அம்பிட்டிய ஆட்டோ சாரதியின் நேர்மை கண்டு கல்வி இயக்குனர் பாராட்டு
Reviewed by Author
on
April 07, 2015
Rating:
Reviewed by Author
on
April 07, 2015
Rating:


No comments:
Post a Comment