நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மாதர்,கிராம அபிவிருத்திச்சங்கங்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் குணசீலனினால் ஒரு தொகுதி பொருட்கள் கையளிப்பு.-Photos
வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.குணசிலன் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 30 மாதர்,கிராம அபிவிருத்திச்சங்கங்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை(14) ஒரு தொகுதி சமையல் பாத்திரங்களை வழங்கி வைத்தார்.
நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 30 மாதர்,கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு 9 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பெற்றுக்கொள்ளப்பட்ட சமையல் பாத்திரங்கள் இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டது.
நேற்று (14) காலை 11 மணியளவில் முருங்கன் கண்ணாட்டி கிராமத்தில் அமைந்துள்ள பொது மண்டபத்தில் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.
-இதன் போது வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி ஜீ.குணசீலன்,மன்னார் நகர சபை உறுப்பினர் இ.குமரேஸ்,நானாட்டான் பிரதேச சபையின் உப தலைவர் றீகன் ஆகியோர் கலந்து கொண்டு முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட குறித்த மாதர்,கிராம அபிவிருத்திச்சங்கங்களுக்கு பொருட்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மாதர்,கிராம அபிவிருத்திச்சங்கங்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் குணசீலனினால் ஒரு தொகுதி பொருட்கள் கையளிப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
April 15, 2015
Rating:
No comments:
Post a Comment