எதிர்க்கட்சித் தலைவர் பதவி இலங்கை தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் : சபாநாயகரிடம் கடிதம் கையளிப்பு
எதிர்க்கட்சித் தலைவர் பதவி இலங்கை தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்பட வேண்டுமெனத் தெரிவித்து, சபாநாயகரிடம் கடிதமொன்று இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கே. துரைராஜ
சிங்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோரது கையொப்பத்துடன் இந்தக் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அடுத்தபடியாக, பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களைக் கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டுமென இந்தக் கடிதத்தின் ஊடாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி இலங்கை தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் : சபாநாயகரிடம் கடிதம் கையளிப்பு
Reviewed by NEWMANNAR
on
April 10, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
April 10, 2015
Rating:


No comments:
Post a Comment