திண்மக் கழிவு முகாமைத்துவ செயற்திட்டங்களை தயாரிக்க நடவடிக்கை
திண்மக் கழிவுகளை அகற்றல் மற்றும் கழிவு முகாமைத்துவத்திற்கான செயற்றிட்டங்களை தயாரிப்பதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கான ஆய்வுகள் களனி பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் லால் தர்மபிரிய கூறினார்.
நாட்டிலுள்ள திண்மக் கழிவுகள் உரியமுறையில் முகாமைத்துவம் செய்யப்படாமையால், சூழலியல் ரீதியில் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
திண்மக் கழிவுகளை அகற்றுவதில் பிரதேச சபை மற்றும் நகர சபை என்பன பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை குறிப்பிடுகின்றது.
இதனால் திண்மக் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்கான செயற்றிட்டம் ஒன்றை விரைவில் தயாரிக்கவுள்ளதாகவும் அதிகார சபையின் தலைவர் கூறினார்.
திண்மக் கழிவு முகாமைத்துவ செயற்திட்டங்களை தயாரிக்க நடவடிக்கை
Reviewed by NEWMANNAR
on
April 15, 2015
Rating:

No comments:
Post a Comment