ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தத் துரத்திய மர்ம நபர்கள்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளர்கள் மூவரை கூரிய ஆயுதத்தினால் தாக்கும் நோக்கில் இனந்தெரியாத மர்ம நபர்கள் மூவர் நேற்று செவ்வாய்க்கிழமை (07) இரவு, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரியகுளம் வரை துரத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் தூய நீருக்கான உறுதிமொழியை வேண்டி உண்ணாவிரதம் இருந்தவர்களை, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்திக்கச் சென்றபோது, ஊடகவியலாளர்கள் சிலரும் அங்கு சென்றிருந்தனர். அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் திரும்பி வந்துகொண்டிருந்தபோதே, மோட்டார் சைக்கிள் ஒன்றில்; வந்த இரண்டு நபர்கள், தங்களை பொலிஸார் என அறிமுகப்படுத்திக்கொண்டதை அடுத்து தம்வசம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஊடகவியலாளர்களைத் தாக்க முயன்றனர்.
அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய ஊடகவியலாளர்களை அந்நபர்கள் துரத்திச் சென்ற போது, அவ்வூடகவியலாளர்கள் நேரடியாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்குள் ஓடிச் சென்றனர். இது தொடர்பில் 3 ஊடகவியலாளர்களும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததுடன், துரத்திய இருவரில் ஒருவரின் புகைப்படத்தையும் பொலிஸாரிடம் கையளித்தனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தத் துரத்திய மர்ம நபர்கள்
Reviewed by NEWMANNAR
on
April 08, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
April 08, 2015
Rating:


No comments:
Post a Comment