அண்மைய செய்திகள்

recent
-

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 100,000 க்கும் மேற்பட்டவர்கள் கணித பாடத்தில் சித்திபெறவில்லை


கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் 100,000 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கணித பாடத்தில் சித்திபெறவில்லை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சாதாரணதரப் பரீட்சையில் தோற்றிய ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 198 பரீட்சார்த்திகள் கணித பாடத்தில் சித்தியடையவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

இந்தப் பரீட்சையில் 2,56,802 பரீட்சார்த்திகள் கணித வினாப் பத்திரத்திற்கு விடை எழுதியிருந்தனர்.

எவ்வாறாயினும் சாதாரணதரப் பரீட்சையில் கணித பாடத்தில் சித்திபெறதாக மாணவர்கள் இரண்டு வருடங்களுக்கு மேற்படாத காலப் பகுதிக்குள் கணித பாடத்தில் சித்திபெற்றுத்தரும் உறுதிமொழிக்கமைய உயர் தரத்தினை தொடர முடியும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

இந்த செயல்முறையானது முறையாக செயற்படுத்தப்படவில்லை என ஆசிரியர் தொழிற் சங்கம் குற்றம்சாட்டுகின்றது.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 100,000 க்கும் மேற்பட்டவர்கள் கணித பாடத்தில் சித்திபெறவில்லை Reviewed by NEWMANNAR on April 06, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.