ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்களை தடுத்து நிறுத்துங்கள்: ஜோன் அமரதூங்கவிடம் கூட்டமைப்பு கோரிக்கை
வடமாகாண ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் மற்றும், கொலை முயற்சிகள், கைதுகள் தொடர்வதை தடுக்குமாறு சட்டம் ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதூங்கவிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இன்றைய தினம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிறேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், ஈ.சரவணபவன் ஆகியோர் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமர துங்கவை கொழும்பில் சந்தித்துப் பேசியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
யாழ்.மாவட்டத்தில் 3 ஊடகவியலாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் இரு ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
எனவே இவ்வாறான அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் ஊடகவியலாளர்களை தமது பணியிலிருந்து தாமாகவே விலகிக் கொள்ளவேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு சதி முயற்சியாக மேற்கொள்ளப்படுகின்றது என்பதை சுட்டிக்காட்டியிருக்கின்றோம் என அவர்கள் தெரிவித்தனர்.
இதனை செவிமடுத்த அமைச்சர் தாம் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தம்மால் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்பது தொடர்பாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு தெரியப்படுத்துவோம் எனவும் ஜோன் அமரதூங்க மேலும் தெரிவித்தார்.
ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்களை தடுத்து நிறுத்துங்கள்: ஜோன் அமரதூங்கவிடம் கூட்டமைப்பு கோரிக்கை
Reviewed by NEWMANNAR
on
April 29, 2015
Rating:

No comments:
Post a Comment