அண்மைய செய்திகள்

recent
-

நேபாள நிலநடுக்கத்தில் 50,000 கர்ப்பிணிப் பெண்கள் பாதிப்பு


நேபாள நில நடுக்கத்தில் சுமார் 10,000 பேர் பலியாகியிருக்க கூடும் என அந்நாட்டின் பிரதமர் சுஷில் கொய்ராலா கருத்து வெளியிட்டுள்ளார்

இதேவேளை இந்த நில நடுக்கத்தால் சுமார் 50,000 கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நடவடிக்கைகளுக்கான நிதியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக,கவலை வெளியிட்டுள்ள இந்த நிதியத்தின் செயல் இயக்குனரான டாக்டர் பாபாடுண்டே ஓஸோட்டிமெஹின், இது போன்ற பேரிடரின்போது ஏராளமான கர்ப்பிணிகள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன, நேபாள நில நடுக்கத்தால் சுமார் 50,000 கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என நாங்கள் மதிப்பிட்டுள்ளோம்.

இதைப்போன்ற நெருக்கடியான நேரங்களில் பிரசவம் சார்ந்த முறையான சிகிச்சைகளை கர்ப்பிணிப் பெண்கள் பெறுவதில் அதிக இடையூறு ஏற்படும்.

சுகாதாரமற்ற சூழ்நிலை மற்றும் பிறக்கும் குழந்தையின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை உருவாவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன.

எனவே, கர்ப்பிணிகளின் பாதுகாப்பு மற்றும் அவசர தேவைகளை கருத்திற் கொண்டு, நேபாள அரசுக்கு ஒத்துழைப்பாக எங்கள் நிதியத்தின் சார்பில் தேவையான சிகிச்சை உபகரணங்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை நாங்கள் அனுப்பி வைத்துள்ளோம் என கூறியுள்ளார்.
நேபாள நிலநடுக்கத்தில் 50,000 கர்ப்பிணிப் பெண்கள் பாதிப்பு Reviewed by NEWMANNAR on April 29, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.