அண்மைய செய்திகள்

recent
-

இலவச WiFi வசதிகளைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு


பொது இடங்களில் இலவசமாக வழங்கப்படுகின்ற WiFi வசதிகளை கடந்த ஐந்து நாட்களுக்குள் 1693 பேர் பயன்படுத்தியுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவர் நிலையம் குறிப்பிட்டுள்ளது.

நாடு முழுவதும் 26 பொது இடங்களில் இதுவரை ஸ்தாபிக்கப்பட்டுள்ள WiFi வலயங்களில் இலவசமாக இந்த சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையானோர் இலவச WiFi சேவையைப் பயன்படுத்தியுள்ளமை பதிவாகியுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி முகுந்தன் கனகே குறிப்பிட்டார்.

யாழ். நூலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள WiFi வலயத்தின் ஊடாக 50 ற்கும் அதிகமானவர்கள் சேவையைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பிரதமரினால் அண்மையில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இலவச WiFi வசதி அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

அடுத்த சில மாதங்களில் நாடு முழுவதும் 1000 இடங்களில் இலவச WiFi வசதிகளை ஸ்தாபிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இலவச WiFi வசதிகளைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு Reviewed by NEWMANNAR on April 11, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.