கடந்த சில வாரங்களாக இடம்பெற்று வரும் அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவங்கள்
அன்போடும் அரவணைப்போடும் வாழ வேண்டிய குடும்பங்களுக்குள் அதிர்ச்சியூட்டும் கொலைகள், கடந்த சில வாரங்களாக இடம்பெற்று வருகின்றமை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
05.04.2015 அன்று இரத்தினப்புரி – கஹவத்த – கொட்டகெதன பகுதியில் கேட்ட பணத்தை கொடுக்காமையால் தாயார் மகனால் கொலை
மற்றும் 13.04.2015 தாயினால் கொள்வனவு செய்யப்பட்ட புதுவருட உடை யாருக்கு என்ற வாக்குவாதம் வலுப்பெற்றதில் முல்லைத்தீவில் சகோதரர்களுக்கு இடையில் நடந்த மோதலில் சகோதரன் மரணம்
மேலும் 16.04.2015 அன்று மட்டக்களப்பில் தந்தையுடன் வாக்கு வாதத்தினால் தந்தையை தாக்கி கொலை செய்த மகன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான்.
இன்று  (20) நுவரெலியா – பூண்டுலோய – அக்கரமலை பகுதியில் கூரிய ஆயுதத்தால் குத்தி தாய் மற்றும் மகள் ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
தனிப்பட்ட பிரச்சினையால் குடும்ப உறுப்பினரே தாயையும் மகளையும் கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
அன்போடும் அரவணைப்போடும் வாழும் குடும்பத்திற்குள் வன்முறை
வீண் வாக்குவாதங்கள் முற்றி குடும்ப உறுப்பினர்களுக்குள் கொலைகள் நிகழும் கொடூரம்
அழகிய குடும்பங்கள் உறுப்பினர்களை இழந்து கண்ணீருக்கும் பேரிழப்புக்கும் முகம் கொடுக்கும் சம்பவங்கள்.
உள முரண்பாடுகளால் நிகழும் இந்தக் குடும்ப உட்கொலைகளை தடுத்து நிறுத்துவது எப்படி என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
கடந்த சில வாரங்களாக இடம்பெற்று வரும் அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவங்கள்
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
April 20, 2015
 
        Rating: 
      
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
April 20, 2015
 
        Rating: 


No comments:
Post a Comment