ஈராக்கின் திக்ரிட் நகரில் இஸ்லா மிய தேசம் (ஐ.எஸ்.) குழுவிடம் சிக்கி படுகொலை செய்யப்பட்டதாக சந்தே கிக்கப்படும் 1,700 பேரது சடலங்கள் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் பாரிய மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்ப ட்டுள்ளன. அமெரிக்காவின் ஸ்பைசர் இராணுவ முகாம் இருந்த பகுதிக்கு அருகிலேயே இந்த புதைகுழிகள்; கண்டுபிடிக்கப்பட் டுள்ளன. திக்ரிட் நகரை ஐ.எஸ். பிடி யில் இருந்து ஈராக் இராணுவம் அண் மையில் மீட்ட நிலையில் 12 புதை குழிகளை தோண்டும் நடவடிக்கையை ஈராக் தடயவியல் நிபுணர்கள் ஆரம் பித்துள்ளனர். பெரும்பான்மையான 'pயா படை யினர் அடங்கலாக பலரையும் படுகொலை செய்யும் வீடியோவை ஐ.எஸ். கடந்த 2014 ஜ{னில் வெளியிட்டு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதில் உயிர்தப்பியவர்கள் கொடு த்த வாக்குமூலத்தின்படி, ஐ.எஸ். குழு 'pயாக்களை அடையாளம் கண்டே கொலை செய்ததாக குறிப்பிட்டிருந்த னர். சுன்னிக்களின் பலம் மிக்க இட மான திக்ரிட்டுக்கு அருகே அமெரிக் காவின் முன்னாள் தளமான ஸ்பை சர் முகாமை இஸ்லாமிய தேசம் கைப் பற்றியதை அடுத்து, 'pயா படையினர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டு, திட்ட மிட்ட வகையில் கொல்லப்பட்டனர்.ஈராக்கிய 'pயா சமூகத்தின் மீதான இஸ்லாமிய தேசம் குழு வெறுப்பை இந்த நடவடிக்கை காண்பிப்பதாக பார் க்கப்படுகின்றது. 'pயா போராளிகளுடன் இணைந்தே ஈராக் இராணுவம் திக்ரிட் நகரை கைப் பற்றியது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட அடுத்த தினத்திலேயே புதைகுழி களை தோண்டும் நடவடிக்கை ஆரம் பிக்கப்பட்டது. மீட்கப்படும் சடலங்களை அடையா ளம் காண டி.என்.ஏ. சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெரும்பா லானோருக்கு அவர்களது உறவினர் கள் கொல்லப்பட்டது இன்னும் உறுதி செய்யப்படாமல் உள்ளது. ~~நாம் முதலாவது மனித புதைகு ழியை இன்று (திங்கட்கிழமை) தோண்ட ஆரம்பித்தோம். இதுவரை 20 உடல் கள் மீட்கப்பட்டன. இவர்கள் படுகொ லைக்கு உள்ளானவர்கள் என்பது சந் தேகம் இன்றி உறுதியாகிறது" என்று சுகாதார அதிகாரி காலித் அவ் அத்பி ராய்ட்டருக்கு குறிப்பிட்டுள்ளார். "இது மனதை உடையவைக்கும் இடமாகும். எம்மை அறியாமலேயே கண்ணீர் வருவதை தடுக்க முடியா மல் இருக்கிறது. இந்த 1700 பேர் கொல்லப்பட்டது ஒரு காட்டுமிராண்டி த்தனமானதாகும்" என்று அவர் குறி ப்பிட்டுள்ளார். திக்ரிட் நகரில் இருக்கும் முன்னாள் தலைவர் சதாம் ஹ{ஸைனின் ஜனா திபதி மாளிகை வளாகத்திலும் புதை குழிகள் அமைந்துள்ளன. இந்த வளா கம் திக்ரிட்டில் ஐ.எஸ். தலைமையக மாக செயற்பட்டது.
Reviewed by Author
on
April 08, 2015
Rating:


No comments:
Post a Comment