அண்மைய செய்திகள்

recent
-

மயூரன், அன்ரூ சான் உட்பட ஏனைய அறுவருக்கும் தண்டனை நிறைவேற்றம்!

போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட அவுஸ்திரேலியர்களான, மயூரன் சுகுமார் (ஈழத் தமிழர்) மற்றும் அன்ரூ சான் ஆகியோருக்கும் ஏனைய அறுவருக்கும் சற்று முன்னர் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
12 பொலிஸார் சூழ்ந்திருக்க இவர்களுக்கான தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்தோனேசிய செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐ.நா. உயரதிகாரிகள், அவுஸ். அதிகாரிகள், பிலிப்பைன்ஸ் அதிகாரிகள், உறவினர்கள், கருணை உள்ளம் கொண்ட மக்கள் என சர்வதேச அளவில் அனைவரும் இந்தோனேசிய அரசிடம் தண்டனையை ரத்து செய்யுமாறு கேட்டபோதிலும், தண்டனையை நிறைவேற்றியுள்ளது இந்தோனேசிய அரசாங்கம்.

எனினும் இவர்களுடன் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒன்பதாவது நபரான பிலிப்பைன்ஸ் நாட்டைச்சேர்ந்த மேரி ஜேன் வெலொசோ என்னும் பெண்ணின் மரணதண்டனை கடைசி நேரத்தில் தள்ளிப்போடப்பட்டிருக்கிறது.

போதைமருந்தை கடத்துவதற்கான கருவியாக மேரி ஜேன் வெலொசோவை தான் பணியில் அமர்த்தியதாக கூறி பெண் ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டின் காவல்நிலையத்தில் தன்னைத்தானே ஒப்படைத்துக் கொண்டதைத் தொடர்ந்து, மேரிக்கான மரணதண்டனை நிறைவேற்றம் தாமதப்படுத்தப்பட்டிருக்கிறது.

எனினும் பிலிப்பைன்ஸ் அரசு, இந்தோனேஷிய Attorney-General-க்கு மரண தண்டனையை தடை செய்யுமாறு ஒரு அவசர கடிதத்தை அனுப்பியமையை அடுத்தே இப்பெண்ணின் தண்டனை இறுதி நேரத்தில் தள்ளிப் போயிருக்கின்றது.

ஏனைய எண்மரும், அவுஸ்திரேலியக் குடியுரிமை பெற்ற இலங்கை, இந்தோனேசியா, மற்றும் நைஜீரியா, பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர்கள்  ஆவார்கள்.போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட அவுஸ்திரேலியர்களான, மயூரன் சுகுமார் (ஈழத் தமிழர்) மற்றும் அன்ரூ சான் ஆகியோருக்கும் ஏனைய அறுவருக்கும் சற்று முன்னர் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
12 பொலிஸார் சூழ்ந்திருக்க இவர்களுக்கான தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்தோனேசிய செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐ.நா. உயரதிகாரிகள், அவுஸ். அதிகாரிகள், பிலிப்பைன்ஸ் அதிகாரிகள், உறவினர்கள், கருணை உள்ளம் கொண்ட மக்கள் என சர்வதேச அளவில் அனைவரும் இந்தோனேசிய அரசிடம் தண்டனையை ரத்து செய்யுமாறு கேட்டபோதிலும், தண்டனையை நிறைவேற்றியுள்ளது இந்தோனேசிய அரசாங்கம்.

எனினும் இவர்களுடன் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒன்பதாவது நபரான பிலிப்பைன்ஸ் நாட்டைச்சேர்ந்த மேரி ஜேன் வெலொசோ என்னும் பெண்ணின் மரணதண்டனை கடைசி நேரத்தில் தள்ளிப்போடப்பட்டிருக்கிறது.

போதைமருந்தை கடத்துவதற்கான கருவியாக மேரி ஜேன் வெலொசோவை தான் பணியில் அமர்த்தியதாக கூறி பெண் ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டின் காவல்நிலையத்தில் தன்னைத்தானே ஒப்படைத்துக் கொண்டதைத் தொடர்ந்து, மேரிக்கான மரணதண்டனை நிறைவேற்றம் தாமதப்படுத்தப்பட்டிருக்கிறது.

எனினும் பிலிப்பைன்ஸ் அரசு, இந்தோனேஷிய Attorney-General-க்கு மரண தண்டனையை தடை செய்யுமாறு ஒரு அவசர கடிதத்தை அனுப்பியமையை அடுத்தே இப்பெண்ணின் தண்டனை இறுதி நேரத்தில் தள்ளிப் போயிருக்கின்றது.

ஏனைய எண்மரும், அவுஸ்திரேலியக் குடியுரிமை பெற்ற இலங்கை, இந்தோனேசியா, மற்றும் நைஜீரியா, பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

தனது குடிமக்களான மயூரன் , மற்றும் சான் ஆகியோர் மரணதண்டனையில் கொல்லப்பட்டால் அதற்கான எதிர்வினைகளுக்கு இந்தோனேஷியா முகம் கொடுக்கவேண்டி வரும் என்று அவுஸ்திரேலியா எச்சரித்திருந்த போதிலும் குற்றவாளிகளை தண்டித்து தடுப்பதற்காகவே இந்த தண்டனை நிறைவேற்றப்படுவதாக இந்தோனேஷியா தெரிவித்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

மயூரன், அன்ரூ சான் உட்பட ஏனைய அறுவருக்கும் தண்டனை நிறைவேற்றம்! Reviewed by NEWMANNAR on April 29, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.