அண்மைய செய்திகள்

recent
-

"விழ விழ எழுவோம்” தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேதின பேரணி!-Photos

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட மேதின பேரணி இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு கல்லடி மணிக்கூட்டு கோபுரச் சந்தியில் ஆரம்பமாகி கல்முனை பிரதான வீதியூடாக கல்லடி உப்போடை துளசி மண்டபத்தை சென்றடைந்தது.

பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் ஆரம்பமான இப்பேரணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை அமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட மேதினக் கூட்டம் கல்லடி உப்போடை துளசி மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது.






"விழ விழ எழுவோம்” தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேதின பேரணி!-Photos Reviewed by NEWMANNAR on May 01, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.