மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் நியமனம் கோரி மகஜர் கையளிப்பு
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மனைப்பொருளியல் பட்டதாரிகள் 14பேர், தங்களுக்கான ஆசிரியர் நியமனத்தை வழங்கக்கோரி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனிடம் மகஜரொன்றைக் கையளித்தனர்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு நேற்று நடைபெறுகையில், அங்கு வருகை தந்த முதலமைச்சரிடமே இவர்கள் தங்களது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்தனர். கலைப்பீடத்தில் மனைப் பொருளியலை சிறப்புப் பாடமாகக் கற்று, கடந்த 2012ஆம் ஆண்டு வெளியேறியவர்களே இவ்வாறு மகஜர் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் நியமனம் கோரி மகஜர் கையளிப்பு
Reviewed by NEWMANNAR
on
May 01, 2015
Rating:

No comments:
Post a Comment