வாக்காளர் இடாப்பு விண்ணப்பப் படிவம் விநியோகம் ஆரம்பம்
வாக்காளர் இடாப்பு பதிவுப் பத்திர விண்ணப்பங்கள் விநியோகிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புப் பதிவுப் பத்திரங்களை கிராமசேவகர்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் வருகை தந்து விநியோகிப்பார்கள் என்றும் தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது. தற்போது ஆரம்பமாகும் பதிவு நடவடிக்கை யூன் மாதம் 15 ஆம் திகதியுடன் முடிவடையும். மேலும் இது குறித்து கிராமசேவகர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளதாகவும் கிராம சேவகர் வழங்கும் பத்திரத்தை பொது மக்கள் பெற்று கொண்டு அவற்றினை சரியாக நிரப்பி மீண்டும் கிராம சேவகரிடம் கையளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பத்திரத்தில் கையொப்பமிடும் நடவடிக்கை தேர்தல்கள் ஆணையாளரால் செப்டெம்பர் மாதம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் இடாப்பு விண்ணப்பப் படிவம் விநியோகம் ஆரம்பம்
Reviewed by Author
on
May 05, 2015
Rating:

No comments:
Post a Comment