இலங்கையர்களுக்கு புதிய கடவுச் சீட்டு
புதிய கடவுச் சீட்டொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் பொது அமைதி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
இதற்கான முன்னோடி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
உத்தேச புதிய கடவுச் சீட்டில் உள்ளடக்கப்படவேண்டிய விபரங்கள் குறித்து ஆராய்ந்து, அமைச்சரவை பத்திரமொன்றை தாக்கல் செய்யவுள்ளதாக அவர் கூறியுள்ளார்
எவ்வாறாயினும் இந்த நடவடிக்கை பூர்த்தியாவதற்கு நீண்ட நாட்கள் தேவைப்படலாம் எனவும் பொது அமைதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஆள் அடையாளத்தை உறுதிபடுத்துவதற்காக, கைவிரல் அடையாளத்தை பயன்படுத்துவது தொடர்பிலும், இதன்போது ஆலோசித்து வருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இலங்கையர்களுக்கு புதிய கடவுச் சீட்டு
Reviewed by NEWMANNAR
on
May 05, 2015
Rating:

No comments:
Post a Comment