கட்டுடலைப் பெற தசைகளில் எண்ணெயையும் அற்ககோலையும் ஏற்றிக் கொண்டதால் விபரீதம்
கட்டுறுதியான உடல் தோற்றத்தை பெற தனது தசைகளில் எண்ணெய் மற்றும் அற்ககோலை ஏற்றிக் கொண்ட நபரொருவர் தனது உயிருக்கு அபாயத்தை தேடிக் கொண்ட சம்பவம் பிரேசிலில் இடம்பெற்றுள்ளது. கல்டஸ் நொவெஸ் நகரைச் சேர்ந்த ஒரு பிள்ளைக்குத் தந்தையான ரொமாரியோ டொஸ் சந்தோஸ் அல்வெஸ் (25 வயது) என்பவரே இவ்வாறு தனது கட்டுறுதியான தோற்றத்திற்காக உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் திரவங்களை தனது தசையில் ஏற்றிக் கொண்டுள்ளார். இந்நிலையில் இரு கரங்களும் துண்டிக்கப்பட வேண்டிய நிலைக்கு உள்ளான அல்வெஸ், தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்துக் கொள்வதற் கும் முயற்சித் துள்ளார். அவர் தற்போது சிறுநீரக செயலிழப்பு உள்ளடங்கலான பல உடல்நலப் பிரச்சினை களுக்கு உள்ளாகி துன்பப்பட்டு வருகிறார்.
கட்டுடலைப் பெற தசைகளில் எண்ணெயையும் அற்ககோலையும் ஏற்றிக் கொண்டதால் விபரீதம்
Reviewed by Author
on
May 05, 2015
Rating:

No comments:
Post a Comment