யாழில் ஐந்து பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வரையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
யாழில் கடந்த சில தினங்களாக காணப்படும் அமைதியின்மையை அடுத்தே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புங்குடுதீவு மாணவியின் கொலை சம்பவத்தின் பின்னர் தொடர்ச்சியாக புங்குடுதீவு , வேலணை , ஊர்காவற்துறை மற்றும் யாழ்.நகரை அண்டிய பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக அமைதியின்மை ஏற்பட்டது.
கடந்த புதன் கிழமை யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதி மீது தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டது. அதனை அடுத்தே ஐவருக்கும் உடன் அமுலுக்கு அவரும் வரையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது
யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், யாழ்.உதவி பொலிஸ் அத்தியட்சகர் , ஊர்காவற்துறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் , யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகிய ஐவருக்குமே அவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை இன்றைய தினம் தாக்குதலுக்கு இலக்கான யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியினை பிரதம நீதியரசர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் நேரில் பார்வையிட்ட சில மணி நேரத்தின் பின்னரே இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்பாண சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்
யாழ்ப்பாண பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சேவைத் தேவைப்பாடுகளின் அடிப்படையில் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இடமாற்ற உத்தரவுகளுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சு அனுமதி அளித்துள்ளது.
அமைச்சின் செயலாளர் இந்த உத்தரவிற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளார்.
யாழ்ப்பாண பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர், யாழ்ப்பாண பராந்தியத்திற்குப் பொறுப்பான உதவி காவல்துறை அத்தியட்சகர், யாழ்ப்பாண காவல் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் புங்குடிதீவு காவல் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அண்மையில் புங்குடிதீவில் பாடசாலை மாணவி வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் பெரும் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டிருந்தன.
சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது நீதிமன்றம் மீதே பொதுமக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 130 பேரை காவல்துறையினர் கைது செய்து விளக்க மறியலில் தடுத்து வைத்துள்ளனர்.
இவ்வாறான ஓர் பின்னணியில் யாழ்ப்பாண பிராந்தியத்தின் முக்கிய காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழில் ஐந்து பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வரையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
Reviewed by NEWMANNAR
on
May 22, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
May 22, 2015
Rating:


No comments:
Post a Comment