அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்திற்கு மேலும் 5ந்து கிறிக்கெட் நடுவர்கள்-Photos


வவுனியா மாவட்ட கிறிக்கெட் சம்மேளனத்தின் அனுசரணையில் இலங்கை கிறிக்கெட் நடுவர்கள் சங்கத்தினால் 04-04-2015 நடாத்தப்பட்ட பயிற்சி பரீட்சை தேர்வில் தேர்ச்சி பெற்ற வடமாகாணத்தில் இருந்து கலந்து கொண்ட கிறிக்கெட் நடுவர்களுக்கான விருது வழங்கல் நிகழ்வானது. 15-05-2015 அன்று வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்தில் இலங்கை கிறிக்கெட் நடுவர்சங்கத்தின் உயர் அதிகாரிகளினால் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபா அவர்களின் முன்னிலையில் தேர்வில் தேர்ச்சிபெற்ற கிறிக்கெட் நடுவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

இவர்களில் மன்னார் மாவட்டத்தில் இருந்து எஸ்.பரிகரன்,எ.எஸ்.ரொபின்சன் குமரர், என்.தீபன்,டி.எம்.கொலின்ஸ் அப்பாஸ் ஆகிய ஜவரும் கிறிக்கெட் நடுவர்களாக தேர்ச்சிபெற்றுள்ளார்கள். இவர்களுடன் சேர்ந்து மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 10 பேர் கிறிக்கெட் நடுவர்களாக கடமைபுரிகின்றனர் இவர்களை மன்னார் இணையமும் வாழ்த்தி நிற்கின்றது.










மன்னார் மாவட்டத்திற்கு மேலும் 5ந்து கிறிக்கெட் நடுவர்கள்-Photos Reviewed by NEWMANNAR on May 19, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.