அண்மைய செய்திகள்

recent
-

மடுவில் நான்கு பேர் கொண்ட கும்பல் மாடு கடத்த முயற்சித்ததாக குற்றச்சாட்டு; நடந்தது என்ன?

 


மடு பிரதேச செயலகபிரிவிற்குட்பட்ட பரிசன்குளம் பகுதியில் மாடு திருட வந்தவர்கள் இராணுவத்தின் உதவியுடன் பிடிக்கப்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

கடந்த வியாழக்கிழமை மூன்று முறிப்பு பகுதியில் அதிகாலை வாகனத்தில் நால்வர் கொண்ட குழுவினர் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த நிலையில், அது தொடர்பாக அந்த பகுதியால் வேலைக்கு சென்ற மிதிவெடி அகற்றும் நிறுவனத்தில் பணியாற்றும் குழுவினரில் ஒருவரால், சின்னவலயங்கட்டு பகுதியில் வசிக்கின்ற ஒருவருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக சின்னவலயங்கட்டு மக்கள் பரிசன்குளம் பகுதியில் இருக்கும் இராணுவ முகாமிற்கு தகவல் வழங்கியிருந்த நிலையில் அவர்களை தடுத்து நிறுத்தும் நோக்கில் இராணுவத்தினர் வீதிக்கு சென்ற நிலையில் குறித்த வாகனம் இயந்திர கோளாறு காரணமாக இராணுவ முகாமிற்கு முன்பே நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக சின்னவலயம்கட்டு பகுதியை சேர்ந்த சிலரும் அந்த பகுதிக்கு சென்ற நிலையில் அங்கு பரபரப்பு நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து அந்த வாகனத்தில் வாள் ஒன்றும் நாட்டு துப்பாக்கி ஒன்றும் இருந்ததாகவும், வாகனத்தில் மாட்டு சாணம் இருந்தாகவும், அருகிலுள்ள பட்டியில் இருந்த மாட்டை கடத்த வந்தாகவும் அங்கிருந்தவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற மடு பொலிசார் அந்த வாகனத்தில் சென்ற நால்வரையும் கைது செய்ததோடு, அவர்கள் கொண்டுவந்ததாக கூறப்பட்ட வாள் மற்றும் நாட்டு துப்பாக்கியையும் கையகப்படுத்தியிந்ததோடு, கடத்த வந்ததாக கூறப்பட்ட மாட்டையும் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட நபர்கள், நாங்கள் மடு கடத்த செல்லவில்லை என்றும், அங்கு இருந்தவர்கள்தான் வாகனத்திற்குள் மாட்டு சாணத்தை போட்டதாவும், அங்கு நின்ற இராணுவத்தினருக்கு முன்னால்தான் இவ்வாறு செய்தார்கள் என்றும், தவிர அங்கு நின்ற சின்னவலயங்கட்டு பகுதியை சேர்ந்த ஒருவருக்கு, வாகனத்தில் சென்ற நால்வரில் ஒருவர் மாட்டு பிரச்சினை தொடர்பில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் தாக்கியதாகவும், அதனை மனதில் வைத்து, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இவ்வாறு திட்டமிட்டு எங்கள் மீது திருட்டு பலியை சுமத்த முற்படுவதாகவும் பொலிஸ் நிலையத்தில் தெரிவித்திருந்தாக கூறப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக மடு பொலிசார் கைது செய்யப்பட்ட நால்வரையும் மன்னார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், வாகனமும், மாடும் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மடு பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








மடுவில் நான்கு பேர் கொண்ட கும்பல் மாடு கடத்த முயற்சித்ததாக குற்றச்சாட்டு; நடந்தது என்ன? Reviewed by Vijithan on May 15, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.