தமிழர் பிரச்சினையை தீர்க்க சுமூகமான சூழ்நிலை உருவாகியுள்ளது – ஜோன் கெரி
தமிழர் பிரச்சினையை தீர்க்க சுமூகமான சூழ்நிலை உருவாகியுள்ளமையினால் அதனை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தையின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (03) முற்பகல் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தனர்.
தமிழர் பிரச்சினையை தீர்க்க சுமூகமான சூழ்நிலை உருவாகியுள்ளது – ஜோன் கெரி
Reviewed by NEWMANNAR
on
May 04, 2015
Rating:
.jpg)
No comments:
Post a Comment