
முன்னாள் அமைச்சர் ஏ. எச். எம். அஸ்வர், முன்னாள் செனட்ட ரும் மேயருமான எஸ். இஸட். எம். மசூர் மெளலானா உட்பட அறுவர் இன்றைய முஸ்லிம் கல்வி மாநாட்டு பொன்விழாவில் கெளரவிக்கப்படுகின்றனர். கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வார்.
பேராசிரியர் ஏ. ஜீ. ஹுஸைன் இஸ்மாயீல் தலைமையில் தபால் அமைச்சின் கேட்போர் கூடத்தில் அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் பொன் விழா இன்று (17/05) மாலை 3.45 மணிக்கு நடைபெறும். கல்வி ராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் கெளரவ அதிதியாகக் கலந்துகொள்வார்.
அமைச்சர்களான ஏ. எச். எம். பெளஸி, ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியுதீன், கபீர் ஹாஷிம், எம். எச். ஏ. ஹலீம் ஆகியோர் விசேட அதிதிகளாகக் கலந்துகொள்வர்.
கலாநிதி உவைஸ் அஹமட் பிரதான உரையை நிகழ்த்துவார்.
முஸ்லிம் கல்வி மாநாட்டின் பொன்விழா, மலரும் இன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் பேராசிரியர் எம். எஸ். எம். அனஸ் தலைமை உரை நிகழ்த்துவார்.
முஸ்லிம் கல்வி மாநாட்டின் ஸ்தாபக உறுப்பினர்கள் பலர் இன்றைய விழாவில் கெளரவிக்கப்படுவர்.
பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் உட்பட பல பிரமுகர்கள் இன்றைய விழாவில் பங்குபற்றுவர்.
No comments:
Post a Comment