அண்மைய செய்திகள்

recent
-

அப்பாவி மாணவி வித்தியாவுக்கு ஏற்பட்ட விபரீதம் இந்த நாட்டில் யுவதிகளுக்கு ஏற்படக்கூடாது -அமைச்சர் ரோஸி


கொடூரமாக கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவுக்கு ஏற்பட்ட நிலை மீண்டும் இந்த நாட்டில் எந்தவொரு யுவதிக்கும் ஏற்படக்கூடாது என்பதை வலியுறுத்தி இன்று மாலை 5.00 மணிக்கு அமைதியாக சோகத்தை பகிர்ந்து கொள்ள கொழும்பு சுதந்திர சதுக்கத்துக்கு மெழுகுவர்த்தியுடன்....

இலங்கையர்கள் அனைவரையும் ஒன்று திரண்டு வருமாறு சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஸி சேனநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் ரோஸி சேனநாயக்க இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

அப்பாவி மாணவி வித்தியாவுக்கு ஏற்பட்ட விபரீதம் இந்த நாட்டில் யுவதிகளுக்கு ஏற்பட்ட இறுதி நிகழ்வாக இருக்க வேண்டும்.

இந்த சம்பவத்தைக் கண்டித்து கிளர்ந்தெழுந்து ஆர்ப்பாட்டம் நடத்தியது நியாயமே.

இருந்தாலும் இந்தக் கொடூரத்தை எதிர்த்து யாழ். மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை இனவாதமாக்கி குறுகிய அரசியல் லாபம் பெற முயற்சிக்கும் தென்னிலங்கை அரசியல்வாதிகளின் நடவடிக்கை கண்டிக்கப்பட வேண்டும் என்றார்.

இன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறும் இந்த நிகழ்வில் பிரதி மகளிர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச உட்பட பல அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
அப்பாவி மாணவி வித்தியாவுக்கு ஏற்பட்ட விபரீதம் இந்த நாட்டில் யுவதிகளுக்கு ஏற்படக்கூடாது -அமைச்சர் ரோஸி Reviewed by NEWMANNAR on May 24, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.