தமிழர்களின் உரிமைகளை வழங்க இணங்கும் கட்சியுடன் புரிந்துணர்வு உடன்பாடு: செல்வம் அடைக்கலநாதன்
எதிர்வரும் பொதுத் தேர்தல் ஒரு தீர்மானகரமான தேர்தல் என்பதால், தமிழ் மக்களின் உரிமைகளை வழங்க இணங்கும் அரசியல் கட்சியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவின்றி தெற்கு அரசியல் கட்சிகளுக்கு அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை மட்டக்களப்பு சித்தாண்டி நகரில் நடைபெற்ற தமிழரசு கட்சியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே. துரைராஜாசிங்கம், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளை உறுதிப்படுத்தும் மற்றும் பாரம்பரிய தாயகத்தை ஏற்றுக்கொள்ளும் அரசியல் கட்சிக்கு ஆதரவு வழங்கப்படும் என கூறியுள்ளார்.
தமிழர்களின் உரிமைகளை வழங்க இணங்கும் கட்சியுடன் புரிந்துணர்வு உடன்பாடு: செல்வம் அடைக்கலநாதன்
Reviewed by NEWMANNAR
on
May 02, 2015
Rating:

No comments:
Post a Comment