அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை சட்டஉதவி ஆணைக்குழுவின் மன்னார் பிரிவின் ஏற்பாட்டில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த பிரஜா உரிமை வழங்கும் நிகழ்வு

இலங்கை சட்டஉதவி ஆணைக்குழுவின் மன்னார் பிரிவின் ஏற்பாட்டில்  (26/06/2015) ஒழுங்கமைக்கப்பட்டிருந்த பிரஜா உரிமை வழங்கும் நிகழ்வு

  கிளிநொச்சி பலநோக்கு கூட்டுறவு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர்கள் நேரடியாக கொழும்பிலிருந்து வருகை தந்து மக்களுடன் உரையாடி பிரஜா உரிமை சான்றிதழை வழங்க நடவடிக்கை எடுத்ததுடன் வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்தும் பயனாளிகள் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் மன்னாரில் இருந்து கிளிநொச்சிக்கான இலவச போக்குவரத்து சேவையினையும் மக்களுக்கு ஆணைக்குழு ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரஜா உரிமை தேவைப்படும் மக்கள் இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளுமிடத்து அச்சான்றிதழை முற்றிலும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

என்பதோடு தேவைப்படுவோர் எமது அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 023 2222045 எனும் அலுவலக தொலைபேசி ஊடாக எம்முடன் தொடர்பு கொண்டு உரிய சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.


இலங்கை சட்டஉதவி ஆணைக்குழுவின் மன்னார் பிரிவின் ஏற்பாட்டில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த பிரஜா உரிமை வழங்கும் நிகழ்வு Reviewed by NEWMANNAR on June 28, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.