மன்னாரில் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை ஏற்பாடு செய்த , தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவு தின அஞ்சலி நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (26) காலை 10.30 மணியளவில் மன்னார் வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் இடம்பெற்றது.
-முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து நினைவு உரைகள் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை பிரதிநிதிகள்,கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ,கட்சியின் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

No comments:
Post a Comment