அண்மைய செய்திகள்

recent
-

யர்சிகாவை விற்றாரா..? அம்மா.


கிளிநொச்சி உருத்திரபுரம் எள்ளுக்காடு கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை காணாமல் போன சிறுமி இன்னமும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் சிறுமியை கண்டுபிடிப்பதற்கான தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுமி காணாமல் போன விடயத்தில் அவரது தாயார்மீதே பொலிஸார் சந்தேகம் கொண்டுள்ளனர். அவர் குழந்தையை பணத்திற்காக விற்றிருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிஸார் சிறுமியின் தாயாரை தடுத்து வைத்து விசாரணை செய்கின்றனர்.

ஒன்றுவிட்ட சகோதரன் ஒருவருடன் சிறுமி யர்சிகா குளிப்பதற்காக சக்திபுரம் குளத்திற்கு அனுப்பியதாகவும் தான் அங்கு சென்று பார்த்தபோது குழந்தையைக் காணவில்லை என்றும் தாயார் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனது குழந்தையை யாரும் கடத்தவுமில்லை. கொலை செய்யவுமில்லை என்று தான் உறுதிபடத் தெரிவிப்பதாக தாயார் கூறியுள்ளார்.

இதேவேளை தாயாரின் செயற்பாடும் அவர் குழந்தையை விற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதாக எள்ளுக்காட்டில் பேசப்படுகிறது.

தாயார். ஒன்றுவிட்ட சகோதரன், பாதிரியார் ஒருவர் உள்ளிட்ட ஏழு பேர் சிறுமியின் காணாமல் போதலுடன் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்பட்டு தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படுகின்றனர்.

விசாரணைகளின் ஊடாக சிறுமிக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்கலாம் என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் சிறுமிக்கு கிராமத்தில் ஏதேனும் நடத்திருக்க வாய்ப்பில்லை என்றும் தமது தேடுதல் நடவடிக்கைகள் முழுமையாக முடிவடைந்துள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.

மூன்று வயதான உதயகுமார் யர்சிகாவுக்கு என்ன நடந்தது என்பது எள்ளுக்காடு கிராமத்தை மாத்திரமின்றி வடக்கு கிழக்கையும் தென்னிலங்கையும் பாதித்துள்ள செய்தியாக பரவியுள்ளது. சிறுமியின் விடயத்தில் தொடர்ந்தும் மர்மம் நீடிக்கிறது.

யர்சிகாவை விற்றாரா..? அம்மா. Reviewed by Author on June 27, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.