
வடபகுதியில் இவ்வருட முதல் காலாண்டிற்குள் 23 பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், 38 சிறுவர்கள் பெற்றோரால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக உத்தி யோகபூர்வ தகவல்கள் கூறுகின்றன.
இதேவேளை, உத்தியோகபூர்வ பதிவு கள், முறையீடுகளுக்கு உள்ளடங்காமலும், மறைக்கப்பட்ட நிலையிலும் கணிசமானளவு பாலியல் வல்லுறவுக் கொடுமைகள் அரங்கேறியிருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் பதிவு செய்யப்பட்ட பாலியல் கொடுமைகளில் யாழ். மாவட்டம் முன்னணியில் உள்ளது. யாழ். மாவட்டத்தில் 10 சம்பவங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 சம்பவங்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 5 சம்பவங்களும், மன்னார் மாவட்டத்தில் 2 சம்பவங்களும், வவுனியா மாவட்டத்தில் 2 சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குறித்த காலாண்டு பகுதியில் பெற்றோரால் புறக்கணிக்கப்பட்ட சிறார்கள் என்ற வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 18 முறைப்பாடுகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 11 முறைப்பாடுகளும், வவுனியா மாவட்டத்தில் 6 முறைப்பாடுகளும், யாழ். மாவட்டத்தில் 3 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment