கூட்டு பொறியியலாளர் நிறுவனத்தின் கண்காட்சி
கூட்டு பொறியியலாளர் நிறுவனத்தின் கண்காட்சி இன்று (2015-06-26)பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப கண்காட்சி மண்டபத்தில் ஆரம்பமானது.கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதனை ஆரம்பித்து வைத்தார்.
இலங்கை மற்றும் பல்வேறு வெளிநாட்டு உற்பத்தியாளர்கள் இந்த கண்காட்சியில் தமது உற்பத்திகளை காட்சிபடுத்தியுள்ளனர்.நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை வரை இந்த கண்காட்சி இடம் பெறும்.
இயந்திரங்களின் செயற்பாடுகள்,அதனது வடிவமைப்பு,அத்தோடு சோலா மின் உற்பத்தி தொடர்பிலான காட்சிப் பொருட்கள் என்பனவும் இந்த கண்காட்சி கூடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
கூட்டு பொறியியலாளர் நிறுவனத்தின் கண்காட்சி
Reviewed by NEWMANNAR
on
June 26, 2015
Rating:

No comments:
Post a Comment