அண்மைய செய்திகள்

recent
-

அனுமதியின்றி மன்னாரில் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன – ஐங்கரநேசன்


எவ்வித அனுமதியுமின்றி மன்னாரில் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், புளியங்களம் கிராமத்தில் இடம்பெற்ற வயல் விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது;

எங்களிடம் எந்தவித அனுமதியும் பெறப்படாமல் மன்னார் பகுதியில் உள்ள கஜூவத்தையில் 6000 ஏக்கர் அளவில் மூங்கில் பயிரிடப்பட்டு வருகிறது. பரப்புக்கடந்தானில் எந்தவொரு உத்தியோகத்தருக்கும் தெரியாமல் 65 ஏக்கர் காட்டுக்குள் ஒற்றைவழிப்பாதை அமைத்து உள்ளுக்குள் காடழித்து அங்கு அன்னாசிப் பயிர்செய்கை மேற்கொள்ளப்படுகிறது. எல்லாமே அரசியல்வாதிகளின் துணையுடன்தான் செய்யப்படுகின்றன. வடக்கு மாகாண சபை தற்போது நிர்வாகத்தில் இருக்கின்றோம். எங்களுக்கு கீழே விவசாய திணைக்களங்கள் இருக்கின்றன. எங்களுடைய அதிகாரிகளுக்கோ எங்களுக்கோ தெரியவராமல் மத்திய அரசாங்கமோ அல்லது வெளிநாட்டு நிறுவனங்களோ ஒரு பயிரை அறிமுகப்படுத்துவதென்பது பாதக விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு.

அனுமதியின்றி மன்னாரில் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன – ஐங்கரநேசன் Reviewed by NEWMANNAR on June 26, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.