அண்மைய செய்திகள்

recent
-

பிரபாகரன் பயன்படுத்திய கைத்துப்பாக்கி மாயம்!


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயன்படுத்திய கைத்துப்பாக்கியை மாயமாகியுள்ளது. பிரபாகரன் பயன்படுத்திய கைத் துப்பாக்கி எங்குள்ளது என்பது பற்றிய தகவல்கள் கிடையாது. 2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி நந்திக்கடலில் பிரபாகரன் கொல்லப்பட்ட போது, அவரது பிரத்தியேக ஆயுதங்களுக்கு என்னவாயிற்று என்பது பற்றிய விபரங்கள் இல்லை. GLOCK 17 ரக மில்லிமீற்றர் 9 ரக கைத் துப்பாக்கியை பிரபாகரன் விரும்பி பயன்படுத்தினார் எனவும் அதனை அநேக சந்தர்ப்பங்களில் இடுப்பில் வைத்திருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த வகை கைத்துப்பாக்கி மிகவும் விலை உயர்ந்ததாகும். M16A2 ரக ரைபில் ஒன்றையும் பிரபாகரன் பிரத்தியேக ஆயுதமாக பயன்படுத்தியுள்ளார். இதற்கு மேலதிகமாக உறுப்பினர்களை அடயாளம் காண்பதற்காக கழுத்தில் கட்டப்படும் இலக்கத் தகட்டையும் காணவில்லை. பிரபாகரனின் உறுப்புரிமை இலக்கம் 001 ஆகும். பிரபாகரன் பயன்படுத்திய இரண்டு ஆயுதங்கள் மற்றும் இலக்கத் தகடு என்பனவற்றுக்கு என்னவாயிற்று என்பது புரியாத புதிராகியுள்ளது என பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபாகரன் கொல்லப்பட்ட போது உயர்பதவிகளை வகித்த பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்தவர்கள் நினைவுச் சின்னமாக இந்தப் பொருட்களை எடுத்துச் சென்றார்களா அல்லது அழிக்கப்பட்டு விட்டதா என்பது மர்மமாகவே நீடிக்கின்றது என சிங்கள பத்திரிகையொன்று முதல்பக்க செய்தி வெளியிட்டுள்ளது.
பிரபாகரன் பயன்படுத்திய கைத்துப்பாக்கி மாயம்! Reviewed by Author on June 06, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.