செல்ல மகளின் அழகிய புகைப்படங்களை வெளியிட்ட டோனி
இந்திய அணித்தலைவர் டோனி தனது மகள் ஜிவாவின் பல அழகிய புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் டோனியின் மனைவி சாக்ஷி அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு ஜிவா என்று பெயர் சூட்டப்பட்டது. குழந்தையை கூட பார்க்காமல் உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடிய டோனி, போட்டிகள் முடிந்து தான் தனது குழந்தையை பார்த்தார். இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் குழந்தையுடன் டோனி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளிவந்தன. தற்போது டோனி தனது குழந்தையின் பல அழகிய புகைப்படங்களை சமூகவலைதளமான பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார்.
செல்ல மகளின் அழகிய புகைப்படங்களை வெளியிட்ட டோனி
Reviewed by Author
on
June 12, 2015
Rating:

No comments:
Post a Comment