புதிய தேர்தல் முறைக்கு அங்கீகாரம் கிடைத்தாலும் அமுல்படுத்துவது கடினம்: ஆர்.சம்பந்தன்
புதிய தேர்தல் முறை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டாலும் கூட, அதனை உடனடியாக அமுல்படுத்துவது சவாலான விடயம் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரான ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
புதிய தேர்தல் முறையை உள்ளடக்கிய 20வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு இலங்கையின் அமைச்சரவை இன்று அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்நிலையில் இந்த சட்டமூல நிறைவேற்றமானது தமிழர்கள் தேர்தல் தளத்தில் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்தும் என, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர், லங்காசிறி 24 செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் விபரித்துள்ளார்.
விரைவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் பழைய முறையின் கீழ் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை புதிய தேர்தல் முறையை உடனடியாக அமுல்படுத்துவதில் தொடர்பில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
புதிய தேர்தல் முறைக்கு அங்கீகாரம் கிடைத்தாலும் அமுல்படுத்துவது கடினம்: ஆர்.சம்பந்தன்
Reviewed by Author
on
June 12, 2015
Rating:
Reviewed by Author
on
June 12, 2015
Rating:


No comments:
Post a Comment