உயர்தரப் பரீட்சைக்கு முன் தேர்தலை நடத்தவும்: இலங்கை ஆசிரியர் சங்கம்
இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தடை ஏற்படாதவகையில் தேர்தலை நடத்துமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
தேர்தல் மற்றும் அதன் பிரச்சார நடவடிக்கையினால் தேசிய பரீட்சை நடவடிக்கைகளுக்கு பல்வேறு தடைகள் இதற்கு முன்னர் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தினுள் பொது தேர்தலை நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன.
கடந்த காலங்களில் ஓகஸ்ட் செப்டெம்பர் மாதங்களில் தேர்தலை நடத்தியமையினால் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.
மாணவர்கள் போன்றே ஆசிரியர்களுக்கும் பரீட்சை நடவடிக்கைகளின் போது சிக்கல் நிலை ஏற்பட்டது.
மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும் உயர்தர பரீட்சையின் போது அதற்கு தடை ஏற்படும் வகையில் தேர்தலை நடத்த நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க முடியாதென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
எனவே எதிர்வரும் பொது தேர்தலை உயர்தர பரீட்சைக்கு முன்னர் நிறைவு செய்து விடுமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்வதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சைக்கு முன் தேர்தலை நடத்தவும்: இலங்கை ஆசிரியர் சங்கம்
Reviewed by NEWMANNAR
on
June 06, 2015
Rating:

No comments:
Post a Comment