கொள்முதல் நிறுவனங்களை கண்டித்து மீனவர்கள் இன்று முதல் காலவரம்பற்ற வேலை நிறுத்த போராட்டம்: ஒரு கோடி வர்தகம் பாதிப்பு
இறால் மீன் கொள்முதல் செய்யும் நிறுவனங்களின் சின்டிகேட் முறையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரம்பற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் இறால் மீன்கள் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் (சின்டிகேட் அமைத்து) கூடி பேசி கிலோ ஒன்றிற்கு சாரசரி ரூ 100 முதல் 250 வரை குறைவான விலைக்கு கொள்முதல் செய்ததால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள மீனவ அமைப்புகள் அரசு தலையிட்டு போதிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர்.
ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் நேற்று அவசர ஆலோசனைக்கூட்டம் நடத்தினர்.இதில் இறால் மீன்களுக்கு போதியவிலை கிடைக்கும் வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில ஈடுபடுவது எனவும்,இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்தச் செல்லப்பட்ட 14 மீனவர்களையும் 28 படகுகளையும் உடனடியாக மீட்கவும் பாரம்பரிய கடல்பகுதியில் அச்சமின்றி மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை மற்றும் தாக்குதல் சம்பவங்களுக்கு அஞ்சி மீன்பிடி தொழில் செய்து வரும் நிலையில் இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் கூடி பேசி எங்களுக்கு போதிய விலை கொடுப்பதில்லை இதனால் எங்களுக்கு பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதால் தொடாச்சியாக படகுகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே அரசு தலையிட்டு போதிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுவரை எங்களது போராட்டம் தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர் இந்த வேலைநிறுத்தப்போராட்டத்தால் ஜந்து ஆயிரம் மீன்பிடி தொழிலாள்களும் சுமார் 25 ஆயிரம் சார்பு தொழிலாளர்களும் வேலையிழந்துள்ளதோடு நாள் ஒன்றுக்கு ஒரு கோடி வர்த்தகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொள்முதல் நிறுவனங்களை கண்டித்து மீனவர்கள் இன்று முதல் காலவரம்பற்ற வேலை நிறுத்த போராட்டம்: ஒரு கோடி வர்தகம் பாதிப்பு
Reviewed by NEWMANNAR
on
June 06, 2015
Rating:

No comments:
Post a Comment