நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவ தேர்த்திருவிழா
கடந்த 18ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மஹோற்சவ திருவிழாவில் கடந்த 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு முத்துச் சப்பறமும், 27ம் திகதி பகல் விசேட கருட சர்ப்ப பூசையும் வாயு பட்சணி நாகம் வீதியுலாவும் இடம்பெற்று 29ம் திகதி இரவு சப்பறத் திருவிழா நடைபெற்றது. இன்று செவ்வாய்க்கிழமை தேர்த்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது. நாட்டின் பல பாகங்களிலுமிருந்து பக்தர்கள் கூடி அன்னையின் தேர்வடம் பிடித்து நேர்த்திகளை நிறைவேற்ற பரிவார மூர்த்திகளும் தேர் உலா வந்து அருட்காட்சி வழங்கினர். இன்றைய தேர்த்திருவிழாவுக்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவ தேர்த்திருவிழா
Reviewed by Author
on
June 30, 2015
Rating:

No comments:
Post a Comment