"பொரித்த கோழி"க்கு பதிலாக "பொரித்த எலி"யை ருசிக்க கொடுத்த கேப்சி உணவகம்: அதிர்ச்சியடைந்த நபர்
அமெரிக்காவில் உள்ள கேப்சி உணவகம் நபர் ஒருவருக்கு, "பொரித்த கோழிக்கு" பதிலாக "பொறித்த எலி" கொடுத்ததால் அந்நபர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
அமெரிக்காவில் கேஎப்சி சிக்கன் என்பது மக்கள் மத்தியில் பிரபலமான ஒன்றாகும்.
இந்நிலையில், கலிபோர்னியாவை சேர்ந்த டிவோரிஸ் டிக்சன் என்பவர் அங்குள்ள கேப்சி கடை ஒன்றிற்கு சென்றுள்ளார்.
அங்கு, "பொரித்த கோழிக்கு" ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்திருந்த அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
அவருக்கு கொடுக்கப்பட்டது பொரித்த கோழி அல்ல பொரித்த எலி, இதனால் அதிர்ச்சியடைந்த அவர், கடை உரிமையாளரிடம் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர் ஆர்டர் செய்த உணவு அளிக்கப்பட்டது.
இதனை அவர் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். கென்டகி பிரைடு சிக்கன் (கே.எப்.சி) என்ற பெயரை கென்டகி பிரைட் ரேட் (கே.எப்.ஆர்) என மாற்றி விடலாம் என்று பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.
இதற்கு விளக்கம் அளித்துள்ள கேஎப்சி, எங்களுக்கு அனுப்பப்படும் கோழிகள் பலவடிவங்களில் வருவது வாடிக்கையான ஒன்றாகும், தற்போது இந்த குற்றச்சாட்டை வைத்துள்ள டிக்சனை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம், ஆனால் அவர் ஒத்துழைக்க மறுக்கிறார் என கூறியுள்ளனர்.
மேலும், இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.
"பொரித்த கோழி"க்கு பதிலாக "பொரித்த எலி"யை ருசிக்க கொடுத்த கேப்சி உணவகம்: அதிர்ச்சியடைந்த நபர்
Reviewed by Author
on
June 17, 2015
Rating:

No comments:
Post a Comment